Tuesday, February 20, 2024

60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு

 

அரசு அறிக்கை:

தமிழக அரசுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணியானது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்றவை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்காக, ஜன., 2024 ஜனவரி வரை, 27,858 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, பல்வேறு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

நீதித்துறையில், 5,981 பணியிடங்கள்; 

பள்ளிக்கல்வித் துறையில், 1,847; 

வருவாய்த் துறையில், 2,996; 

மக்கள் நல்வாழ்வுத் துறையில், 4,286; 

ஊரக வளர்ச்சித் துறையில், 857; 

உயர்கல்வித் துறையில், 1,300; 

காவல், நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட மற்ற துறைகளில், 15,442 பணியிடங்களும், அந்தந்த துறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டுள்ளன.

அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், 60,567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News