Join THAMIZHKADAL WhatsApp Groups
உடலின் செயல்பாடு சீராக நடைபெற வேண்டுமானால், அதற்கு உடலுக்கு போதுமான அளவில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைக்க வேண்டும்.
இதில் வைட்டமின்களானது நமது உடல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு தேவையானவையாகும்.
வைட்டமின்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டிற்கும் இன்றியமையாதவை. அதில் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை அனைவரும் அறிவோம்.
வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இது பல உணவுகளில் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது மற்றும் இச்சத்தின் பொறுப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதாகும்.
இந்த வைட்டமின் ஏ உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அதன் விளைவாக ஒருசில பிரச்சனைகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது வைட்டமின் ஏ குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
சரும வறட்சி
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வைட்டமின் ஏ சத்து மிகவும் இன்றியமையாதது. இந்த வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், அதன் விளைவாக சருமத்தில் வீக்கம், அரிப்பு, எரிச்சல் மற்றும் அதிகப்படியான வறட்சியை சந்திக்க நேரிடும். இந்த வைட்டமின் ஏ மிகவும் குறைவாக இருப்பின், அது எக்ஸிமாவை உண்டாக்கும். எனவே நீங்கள் திடீரென்று மிகுதியான சரும வறட்சியையும், சரும அரிப்பையும் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். அதற்கு இந்த வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக இருக்கலாம்.
மோசமான கண் பார்வை
கண்களின் ஆரோக்கியத்திற்கு, கூர்மையான பார்வைக்கும் வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. இந்த சத்து உடலில் குறைவாக இருந்தால், அதன் விளைவாக பார்வை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இச்சத்து குறைபாடு தீவிரமானால் மாலைக்கண் நோய், உலர் கண் நோய்க்குறி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
வளர்ச்சி குறைபாடு
குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். இந்த வைட்டமின் ஏ உடலில் குறைவாக இருந்தால், அது ஒருவரது வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி திடீரென்று குறைவாக இருப்பதை உணர்ந்தால், அவர்களின் உடலில் வைட்டமின் ஏ குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி நோய்த்தொற்றுகள்
வைட்டமின் ஏ தான் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பராமரிக்கவும் உதவுகிறது. எனவே வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வைட்டமின் ஏ அவசியமாகும். ஆனால் நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒருநோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தால், வைட்டமின் ஏ குறைபாட்டினால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உடல் சோர்வு
வைட்டமின் ஏ உடலில் ஆற்றலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் இந்த வைட்டமின் உடலில் மிகவும் குறைவாக இருந்தால் அல்லது இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், உடல் சோர்வு, களைப்பு மற்றும் நாள் முழுவதும் ஒருவித மந்தமாக இருக்கக்கூடும். நீங்கள் இந்த அளவு உடல் சோர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எடை இழப்பு
திடீரென்று காரணமின்றி உங்கள் உடல் எடை குறையத் தொடங்குகிறதா? அதுவும் வேகமாக உடல் எடை குறைவதை உணர்கிறீர்களா? அப்படியானால் அதை நினைத்து சந்தோஷப்படாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
No comments:
Post a Comment