Join THAMIZHKADAL WhatsApp Groups
சொத்து பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் முத்திரைத்தாள், வெளிநபர் பெயரில் வாங்கப்பட்டு இருக்கக் கூடாது; முகவரின் பெயர், முகவரியையும் சரிபார்க்க வேண்டும்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைமை பிறப்பித்துள்ள உத்தரவு: பதிவுக்கு வரும் ஆவணங்களில், சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை சரிபார்ப்பதில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இத்துடன் முத்திரைத்தாள் தொடர்பான விஷயங்களிலும் சார் - பதிவாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் முத்திரைத்தாள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். சொத்தை எழுதி கொடுப்பவர், வாங்குபவரில் ஒருவர் பெயரில் மட்டுமே முத்திரைத்தாள் வாங்க வேண்டும் விற்பவர், வாங்குபவர் தவிர்த்து, வேறு பெயர்களில் வாங்கப்பட்ட முத்திரைத்தாளில் எழுதப்பட்ட பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக்கூடாது முத்திரைத் தாளில் அதை விற்கும் முகவர் குறித்த விபரங்கள் முறையாக இடம்பெற வேண்டும்;
அவற்றில் திருத்தங்கள் இருக்கக் கூடாது. இந்த விபரங்கள், சார் - பதிவாளருக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும் எந்த தேதியில் முத்திரைத் தாள் வாங்கப்பட்டதோ, அதற்கு பிந்தைய நாளில் சொத்து பரிமாற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட வேண்டும் முத்திரைத்தாள் விற்கப்பட்ட தேதியில் இருந்து, ஓராண்டு வரையிலான காலத்துக்குள் அதில் எழுதப்பட்ட சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்யலாம்.இவ்வாறு பதிவுத் துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment