Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 18, 2024

நாளை தமிழக பட்ஜெட் - ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பல்வேறு ஆசிரியர் அரசு ஊழியர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் இந்த வேலையில் தமிழக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது

குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

இதில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முதலமைச்சரின் வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இடைநிலை ஆசிரியர்கள் நாளை முதல் போராட்டம் அறிவித்துள்ளதால் ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

EL சரண்டர் மற்றும் உயர் கல்வி ஊக்கு ஊதியம் போன்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அதற்கான தீர்வுகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்

2024–25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிஉரையுடன் தொடங்கியது. ஆளுநர்தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும்படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும்அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதைத்தொடர்ந்து, அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்.15-ம் தேதிவரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்.13-ம் தேதிஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப்.19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, பிப்.20–ம் தேதிவேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும்மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ இயலாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படியே, இந்தாண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண்பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, பிப்.20–ம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்பின், பிப்.22–ம்தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்கின்றனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கானசட்ட முன்வடிவு தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்படுகிறது.

தங்கம் தென்னரசின் முதல் பட்ஜெட்: கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை முன்னி றுத்தி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள் பட்ஜெட் டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, இந்தாண்டு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News