Join THAMIZHKADAL WhatsApp Groups
கருப்பு கொண்டைக் கடலையில் புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து என பல வகையான சத்துக்கள் உள்ளன. இதனுடன் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி-6, சி, பாஸ்பரஸ், தயாமின், ஃபோலேட் போன்றவையும் ஏராளமாக உள்ளன.
கருப்பு கொண்டைக்கடலை உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடை இழப்பு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
கொண்டைக் கடலையில் மறைந்திருக்கும் மற்ற நல்ல குணங்களை பற்றி இந்த இத்தொகுப்பில் காணலாம்.
இரவு கருப்பு கொண்டைக் கடலையை ஊற வைக்கும் முன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்துவிடுங்கள். காலையில் எழுந்ததும் இந்த தண்ணீரை மட்டும் வடி கட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். வேண்டுமானால் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம். இதனால் உடல் எடை குறைய கூடும்.
நம்மை எந்த நோய் மற்றும் வைரஸ் அண்டாமல் இருக்க வேண்டுமெனில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். அதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருப்பு கொண்டைக்கடலை தண்ணீரை பருகலாம். இந்த நீர் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்குகிறது.
கருப்பு கொண்டைக் கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது உங்க செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. கருப்பு கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் ஜீரணமின்மையை நம்மால் போக்க முடியும்.
கொண்டைக்கடலை இரும்பின் சிறந்த மூலமாகும். இதனை உட்கொள்வதால் இரத்த சோகை பிரச்சனை இருக்காது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கொண்டைக்கடலை உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது.
கொண்டைக்கடலை உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகின்றது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது. கொண்டைக் கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தாமிரம் மற்றும் மாங்கனீசு கொண்டைக் கடலையில் காணப்படுகின்றன. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதனை உண்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.
கொண்டைக் கடலையில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது முடி உதிர்தல் பிரச்சனையிலும் உதவுகிறது. அதே போல் கொண்டைக் கடலையில் வைட்டமின்கள்-ஏ, பி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இது உச்சந்தலையையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கொண்டைக் கடலையில் பீடா கரோட்டின் எனப்படும் ஒரு தனிமம் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு நன்மை பயக்கும். கொண்டைக்கடலை டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் பிரச்சனையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
கருப்பு கொண்டைக் கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை நம்மால் தடுக்க முடியும். ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக கருப்பு கொண்டைக் கடலையில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இது பித்த அமிலங்களை பிணைக்க உதவுகிறது. உடலில் கொழுப்பின் அளவைக் கரைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
No comments:
Post a Comment