Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 2, 2024

விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்த பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்.



தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளாகவும் Footwear ) 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளாகவும் Shoes ) வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்த பார்வையில் காணும் அரசுச் செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . பள்ளி மாணவர்களின் கால் அளவுகளை எடுப்பதற்காக ITK தன்னார்வலர்களை உட்படுத்தி அளவுகளை துல்லியமாக எடுத்து அதன் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்டப் பொருள்களான காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி ) , வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Footwear& Shoes Entry DSE & DEE Proceedings - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News