Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து நோய்களுக்கும் சோற்றுக் கற்றாழை தீர்வு தருகிறது.
சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவு பெறும்.
சோற்றுக் கற்றாழையை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலும் உபயோகப்படுத்துவதாலும் பெண்கள், ஆண்களின் சிறுநீர் தாரையில் உள்ள எரிச்சல் புண்கள் குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இரு பகுதியும் நன்றாகச் சேரும் வண்ணம் நூலால் இருகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் பார்க்கும்போது, வெந்தயம் நன்கு முளைவிட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வர தீராத வயிற்றுவலி, வாய் வேக்காடு, வயிற்றுப் புண், சிறுநீர் தாரைப் புண் ஆகியவை முற்றிலும் குணமாகும்.
கற்றாழை சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்துவர உடல் சூட்டினால் ஏற்படும் முகப் பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை, மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுகள் குணமாகும்.
No comments:
Post a Comment