Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 5, 2024

மகர ராசியில் உண்டாகும் புதன் - சுக்கிரனின் சேர்க்கை.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, புதன் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளார். ஆகையால் சுக்கிரன், சூரிய பகவான், செவ்வாய் கிரகம் ஆகியவை தனது இருப்பிடத்தை மாற்றி வேறு ராசிக்குச் செல்லவுள்ளன.

மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி செல்வ வளத்தைக் கொடுக்கும் சுக்கிர ராசி மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இப்படி புதனும் சுக்கிர பகவானும் மகர ராசியில் இணைவதால் அந்த இடத்தில் லட்சுமி நாராயண யோகம் உண்டாகிறது.

பொதுவாக புதன் கிரகம் நிதானம், அர்த்தச் செறிவு, பேச்சு ஆகியவற்றிற்குக் காரணமாக இருக்கிறார். மேலும் சுக்கிர பகவான், செல்வத்தை தரக்கூடியவர். அத்தகைய நற்பண்புகளைக் கொண்டிருக்கும் புதனும் சுக்கிரனும் இணைவதால் கிடைக்கும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு ராஜயோகத்தைத் தரும் ஜோதிட நிபுணர்களின் நம்பிக்கை.

மேஷம்: மகர ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் இணைவால், இந்த ராசியினர், அற்புதமான பலன்களைப் பெறுவர். புதிய பிசினஸைத் தொடங்குவர். நிறைய நாட்களாக கொடுத்து கிடைக்காத பணம் மீண்டும் வந்து சேரும். பொருளாதாரச் சிக்கல்கள் மறையும்.

மிதுனம்: இந்த ராசியில் புதன் மற்றும் சுக்கிரனால் உண்டாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பொருளாதார மேம்பாடு கிடைக்கும். நிறைய புதிய பணிக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். சைடுபிசினஸில் இருந்து பணப்பலன்கள் சீராக கிடைக்க ஆரம்பிக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். தொழில் முனைவோர்களுக்கு கிடைக்காமல் இருந்த பணம் கை வந்து சேரும். கடை வைத்திருப்பவர்கள், கடையை விரிவுபடுத்துவர்.

கன்னி: பிப்ரவரி 12ல் சுக்கிரன் மகர ராசியில் நுழைவதாலும், முன்பே புதன் மகர ராசியில் இருப்பதாலும் உண்டான லட்சுமி நாராயண யோகத்தால் கன்னி ராசியினருக்கு நன்மைகள் கிடைக்கும். இக்கால கட்டத்தில் வாங்கிய கடன்களை எல்லாம் அடைப்பீர்கள். வீட்டைச் சீராக்குவீர்கள். கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வீடு வாங்க நினைத்தவர்களுக்கு, கடன் வாங்கியாவது வாங்கிவிடுவீர்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News