Join THAMIZHKADAL WhatsApp Groups
கடந்த 01.04.2012 முதல் 08.06.2017 வரை நடைமுறையில் இருந்து வந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 09.06.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 33 % குறைக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் கடந்த 01.04.2023 அன்று வழிகாட்டி மதிப்பானது 08.06.2017 வரை பின்பற்றப்பட்டு வந்த அதே மதிப்பிற்கு மீள மாற்றப்பட்டது.
5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது.
மேலும் , இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையை இரத்து செய்து ஆணையிடப்பட்டது.
மேற்படி உத்திரவினை எதிர்த்து தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது . மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் மேற்படி ஆணைக்கு 15.02.2024 அன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment