Join THAMIZHKADAL WhatsApp Groups
கசப்பான சுவை கொண்ட உணவு பொருட்கள் இந்த பூமியில் ஏராளம் இருக்கின்றன. அதை பெரும்பாலும் மோசமான வாடையைக் கொண்டிருக்கும் மற்றும் நாம் சாப்பிடும் போது குமட்டலை ஏற்படுத்த கூடும்.
ஆனால் எந்த அளவுக்கு கசப்பு தன்மை இருக்கிறதோ அந்த அளவுக்கு மருத்துவ குணங்களும் நிரம்பி இருக்கும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அந்த வகையில் நிலவேம்பு சிறப்புமிக்க மூலிகை ஆகும். மிகப் பிரதானமாக இது நம் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடியது. நம் உடலில் பெரும்பாலான நோய்களின் மூல ஆதாரம் ரத்தத்தில் இருந்து தொடங்குகிறது என்ற வகையில், அதற்கு நல்ல தீர்வை தருவதாக நிலவேம்பு அமையும்.
ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, தொற்றுகள் அதிகரிக்கும். ஆனால் நிலவேம்பு கஷாயத்தில் உள்ள சாலிசிலிக் அமிலம் நம் ரத்தத்தில் ஊடுருவி தொற்றுகளை ஏற்படுத்துகின்ற கிருமிகளை அழிக்கும். உடனடி தீர்வு கிடைக்கும்.
வயிற்றில் புழு இருப்பதால் அவதி அடைந்து வருபவர்கள், சளி அல்லது காய்ச்சலால் அவதி அடைப்பவர்கள் நிலவேம்பு கஷாயத்தை எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு கிடைக்கும். அதேபோல உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால நோய்களுக்கும் நிலவேம்பு கசாயம் தீர்வு தருகிறது. இதுபோல வேறு என்னென்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
சரும தொற்றுகளுக்கு தீர்வு... நம் ரத்தத்தில் கிருமிகள் ஊடுருவினால் அதன் தாக்கம் நம் சருமத்தில் தெரியும். அரிப்பு, சொரியாசிஸ், தடிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும். ஆனால் நிலவேம்பு கசாயம் அருந்தினால் அதில் உள்ள கெட்ட வாடைக்கு ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கப்படும். அதனால்தான் சரும பிரச்சினைகளுக்கு நிலவேம்பு கசாயத்தை ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கும்... நம் ரத்தத்தில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை இருப்பதால் சிவப்பு ரத்த அணுக்கள் குறைய தொடங்கும். அதன் காரணமாக ஆக்சிஜன் கூடிய சப்ளை குறைந்து ரத்தசோகை உருவாகும். ஆனால் நிலவேம்பு கஷாயம் அருந்தினால் இத்தகைய அழுக்குகள் சுத்திகரிப்பு செய்யப்படும்.
கல்லீரல் பலமடையும்... நீங்கள் நிலவேம்பு கசாயம் அருந்தினால் கல்லீரலில் புதிய செல்கள் உருவாகும் மற்றும் கல்லீரல் பலப்படும். கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்படும்.
ரத்த சக்கரை கட்டுப்படும்... நிலவேம்பு நம் உடலில் மெட்டபாலிச நடவடிக்கைகளை மேம்படுத்தும். மெட்டபாலிசம் நடவடிக்கையில் சிறப்பாக இருந்தால் நம் உடலில் சர்க்கரை துரிதமாக உறிஞ்சப்படுவது குறையும். அதன் எதிரொலியாக ரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்... நிலவேம்பு கசாயம் அருந்தினால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் அழிக்கப்படும். அதன் விளைவாக வாயு தொல்லை, வயிறு உப்புசம், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
No comments:
Post a Comment