Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 26, 2024

ஆசிரியரும் ஆசிரியர் சார்ந்தவையும் குறித்த ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்? நூல் வெளியீடு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் கொண்டாடப்பட்ட உலகத் தாய்மொழி நாள் விழாவில் ஆசிரியரும் ஆசிரியர் சார்ந்தவையும் குறித்த ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்? நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் நூலை மானமிகு ரெ ஈவேரா வெளியிட ஆசிரியை ஜோதி அமுதா பெற்றுக்கொண்டார். தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் இரா காமராசு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி செல்வி மற்றும் சிறப்பு அழைப்பாளர் எழுச்சிக் கவிஞர் கோ கலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கல்வி சார்ந்த பல்வேறு சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி ஆசிரியர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு தலைப்புகளில் அமைந்த உள்ளடக்கம் பின்வருமாறு:

1. அண்மைக்காலக் கல்வியின் நோக்கும் போக்கும்

2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனவேதனை தீருமா?

3. ஆசிரியர்களுக்கு ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

4. ஆசிரியர்களுக்குப் பணியில் மனஅழுத்தத்தைத் தருகிறதா எமிஸ்?

5. ஆசிரியருக்கு ஏன் தேவை பணிப் பாதுகாப்புச்சட்டம்?

6. இல்லம் தேடிக் கல்வி தொய்வு ஏன்?

7. உண்மையான கோடைக் கொண்டாட்டம்

8. கல்வித்துறையில் எதிர்நோக்கும் மாற்றங்கள்

9. கனவு ஆசிரியர் தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை

10. தடம் புரளும் இயக்கப் போர்க்குணத்தால் தடுமாறும் இயக்கங்கள்.

11. நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி

12. நீந்திப் பிழைக்க எப்போது கற்றுத்தரப் போகிறோம்?

13. பதிவேடுகளிலிருந்து ஆசிரியர்களுக்கு எப்போது விடுதலை?

14. பரிதாப நிலையில் இன்றைய ஆசிரியர்கள்

15. பழைய ஓய்வூதிய நெடுங்கனவு நிறைவேறுமா?

16. புற்றுநோயாளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இல்லம் வாழ்வளிக்குமா?

17. மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் புத்துயிர் பெறுமா?



18. மாணவர்கள் பள்ளித் தூய்மைப் பணியில் ஈடுபடுவது மாபெரும் குற்றச்செயலா?

19. வெற்றுக் கொண்டாட்டத்திற்கிடையில் வெந்து தணியும் ஆசிரியர்கள்

20. ஆட்சிபீடத்தின் பலியாடுகளா அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்?

21. தனியார் பள்ளி மாணவர்களைத் தக்க வைக்குமா அரசுப்பள்ளிகள்?

22. பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா?

23. அவர்களுக்கு வாழ்க்கையும் கொஞ்சம் கனவும் இருக்கிறது!

24. ஆளில்லா வகுப்பறை நோக்கி நகர்கிறதா கல்வி?

25. காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு தேவையா?

26. பள்ளிகள் தோறும் பயனற்றுக் கிடக்கும் கற்றல் வளங்கள்

27. பெண்களின் பதவி உயர்வு உரிமையைப் பறிக்கும் அரசாணை 243!

இந்த 27 பொருண்மைகளில் அமைந்துள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் சுய சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும் இந்த நூலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் சமூகத்திற்கு உள்ளது என்றும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பேசினார் ஈவேரா.

நூலாசிரியர் மணி கணேசன் தம் ஏற்புரையில், “இங்கு என்னால் முன்வைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் ரத்தமும், சதையும் நிறைந்தவை. கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வுகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், தவிப்புகள், ஏமாற்றங்கள், வலிகள், வேதனைகள், முனகல்கள், கையாலாகாத நிலைகள் போன்றவை குறித்து, எந்த ஓர் அதிகாரமும் அற்ற குரலற்றவர்களின் குரலின் வெளிப்பாடுகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் உள்ளீடுகள் அமைந்திருப்பதை உங்களில் பலர் நிச்சயம் உணர முடியும்! மேலும், இது புத்தகமல்ல. இதனைத் தொடுபவர் வெறும் காகித்தைத் தொடவில்லை. நாளும் பதற்றத்துடன் பழகியும் முனகியும் வாழும் ஆசிரியர் சமூகத்தின் ஆன்மாவைத் தொடுகிறார்! என்று தம் முப்பதாண்டு கால பணியனுபவப் பெருமூச்சை மக்களிடையே முன்வைத்தார்.

இந்த நூலில் எடுத்துரைக்கப்படும் கருத்துகளையும் முன்மொழியும் சாத்தியக்கூறுகளையும் சம்பந்தப்பட்டவர்கள் செவிமடுத்துக் கேட்க வேண்டியது இன்றியமையாதது என்று விழாவிற்கு வந்திருந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோளாக இருந்ததைக் காண முடிந்தது.

நூல் தேவைக்கு : 7010303298

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News