Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 5, 2024

பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ மாற்று கிரகத்தை கண்டறிந்த நாசா!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பூமியைப் போன்று வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட 'சூப்பர் எர்த்' என்ற புதிய கிரகத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் என்ற கிரகத்தை கண்டறிந்துள்ளது. TOI-715 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டதாகும். இந்த கிரகம் சுற்றுவட்டப் பாதையில் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.
இந்த கிரகம் 19 நாட்களிலேயே தனது முழு சுற்றுவட்டப் பாதையை சுற்றி வருகிறது. இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 19 நாட்களே ஆகும். இதன் மேற்பரப்பில் திரவ நீருக்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. திரவ நீர் இருப்பது உயிரினங்கள் வாழ உகந்த ஒன்றாக உள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சூப்பர்-எர்த்' ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும், அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வானியல் அளவுகோலின்படி, ஒரளவுக்கு பூமிக்கு அருகிலேயே உள்ளது என்று சொல்லலாம் எனவும் நாசா கூறியுள்ளது.

வருகிறது.

'மேற்பரப்பில் நீர் இருக்க வேண்டுமானால், அதற்குப் பொருத்தமான வேறு பல வளிமண்டல காரணிகளும் இருக்க வேண்டும். இதுவரை செய்யப்பட்ட தோராய அளவீடுகள் மூலம், இந்தச் சிறிய கிரகம் பூமியைவிட சற்று பெரியதாக இருக்கலாம்' எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகம் சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரம் சூரியனை விட சிறியது மற்றும் குளிர்ச்சியானது.


இந்த கிரகங்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களை விட மிக நெருக்கமான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை சுற்றி வரும் நட்சத்திரம் சிறியதாகவும், குளிர்ச்சியானவையாகவும் இருப்பதால் கிரகங்கள் நெருக்கமாக கூடியுள்ளன. இவை நெருக்கமானவையாக இருந்தாலும் அவை உயிரினங்கள் வாழ பாதுகாப்பானதாக இருக்கும்' என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News