Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 22, 2024

வெறும் வயிற்றில் தினமும் பூண்டு... அப்புறம் நடக்கும் அதிசயம்!

இயற்கை கொடுத்த வரப்பிரசாதத்தில் பூண்டும் ஒன்றாகும். மண்ணுக்கு அடியில் இயற்கையாக கிடைக்கும் ஒரு பூண்டில் 10க்கும் மேற்பட்ட பற்கள் இருக்கும்.

பொதுவாகவே பூண்டு செரிமான பிரச்சனையை சரியாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை பச்சையாக சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் வீசும் என பலரும் அதை தவிர்ப்பார்கள். அதில் உள்ள நன்மைகளை தெரிந்து விட்டால் யாரும் அவற்றை ஒதுக்கமாட்டார்கள்.

பூண்டு சுவையில் வேண்டுமானால் காட்டமாக இருக்கலாம். ஆனால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதுவும் குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அவ்வளவு நல்லது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

1. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு:

முதலில் பூண்டு உங்களது கொலஸ்ட்ரால் லெவலை கட்டுக்குள் வைக்கும். இதன் மூலமே உங்களுக்கு வரக்கூடிய நிறைய நோய்கள் தடுக்கப்படும்.

2. எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:

ஒரு நாளை பூண்டு பற்களுடன் நிங்கள் தொடங்குவதன் மூலம் உங்களது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3. குடலுக்கு நல்லது:

அதிகாலை வேளையில் நீங்கள் எடுத்து கொள்ளும் பூண்டு பற்களால் உங்கள் செரிமான பிரச்சனை சீராக இருக்கும். இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் மலச்சிக்கல், வயிறு வீக்கம், வயிறு வலி போன்றவற்றை தடுக்க முடியும்.

4. சளிக்கு அருமருந்து:

சளி, இருமலுக்கு பூண்டு ஒரு நல்ல தீர்வாகும். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் உங்களது சளி, இருமல் தொந்தரவுக்கு நீங்கள் குட்பாய் சொல்லலாம்.

5. ஸ்ட்ரெஸ் போக்கும்:

நவீன காலத்தில் பலர்க்கும் இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஸ்ட்ரஸும் ஒன்று. இந்த பிரச்சனைக்கு பலரும் தீர்வு கான முடியாமல் தவிப்பார்கள். பூண்டில் ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் அது உங்களுக்கு ஏற்படும். ஸ்ட்ரஸை குறைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News