Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 22, 2024

சுக்கிரனின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய ராசி மாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒருவருடைய ராசியில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சுக்கிர பகவானின் அனைத்து விதமான மாற்றங்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், சொகுசு, காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

மகர ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட கால ஆசைகள் வருமானத்தின் மூலம் நிறைவடையும்.

தனுசு ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்டகால சிக்கல்கள் நிவர்த்தி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் வீட்டில் ஆடம்பர பொருட்களின் வரவு அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும்.

கும்ப ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top