Join THAMIZHKADAL WhatsApp Groups
''பழைய ஒய்வூதிய திட்டத்தை, சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன; தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதியை மீறும் செயலில், தி.மு.க., அரசு ஈடுபடுகிறது,'' என, சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, சென்னை சைதாப்பேட்டையில் நேற்று, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் நடந்தது; அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, சி.பி.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி தந்தனர்; இதுவரை நிறைவேற்றவில்லை.
பழைய ஒய்வூதிய திட்டத்தை, சிக்கிம் போன்ற சிறிய மக்கள் தொகை உள்ள மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன; தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதியை மீறும் செயலில், தி.மு.க., அரசு ஈடுபடுகிறது.
இதுகுறித்து, நல்ல முடிவை பட்ஜெட்டில், அரசு அறிவிக்கும் என நம்புகிறோம். எங்கள் உணர்வை புரிந்து, அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுதும் போராட்டம் வெடிக்கும்.
No comments:
Post a Comment