Join THAMIZHKADAL WhatsApp Groups
'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் பேரிக்காய் ஒரு மிகச்சிறந்த உணவு. இதில் ஏராளமான சத்துக்களும் நன்மைகளும் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு கைகண்ட மருந்தாக திகழ்கிறது பேரிக்காய்.
பேரிக்காயில் உள்ள சத்துக்கள்: பேரிக்காயில் வைட்டமின் சி, இ, ஏ, புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவைசர்க்கரை நோயாளிகளுக்கு ஆற்றலை அளிக்கிறது.
பேரிக்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். மேலும், இதில் உள்ள சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இந்த பழத்தை உண்ணலாம். டைப் டு டயாபடீஸ் வராமல் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை இது அளிக்கிறது. இந்தப் பழத்தை உண்டு முடித்தவுடன் அவர்கள் புத்துணர்ச்சியுடன் திகழ்வார்கள்.
பேரிக்காயின் நன்மைகள்:
1. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடல் எடை கூடாமல் வைக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இது குடலின் செயல்பாட்டை சீராக்கி செரிமானத்தை தூண்டுகிறது. அதனால் மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தமான உபாதைகள் குறையும்.
2. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன. அடிக்கடி இந்த பழத்தை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
3. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் தாராளமாக பேரிக்காயை உண்ணலாம். ஏனென்றால், இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து ஆஸ்டியோபோரோசிஸ் எனும் நோயை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் கீழ்வாதம் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பேரிக்காயின் பங்கு அதிகம். ஏனென்றால், இதில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதனால் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.
5. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிக்காய் நல்ல மாற்றாக இருக்கிறது. இதில் உள்ள இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பை அதிகரிக்கிறது. இதனால் உடல் சோர்வு, அறிவாற்றல் செயலிழப்பு, தசை பலவீனம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றை தடுக்கிறது
6. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவாகவும் இது விளங்குகிறது. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்க உதவுகிறது. தவிர, மாதவிடாய் நின்ற பிறகு பேரிக்காய் அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
7. இதில் உள்ள வைட்டமின் சத்து சரும சுருக்கங்களை அகற்றி, முகத்தில் உள்ள புள்ளிகள் அளவை குறைக்கிறது. மேலும் சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் மின்னுவதற்கு உதவுகிறது. முடி உதிர்வும் தடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment