Join THAMIZHKADAL WhatsApp Groups
காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக உடல் நலம் காக்கும் சாறு வகைகளை பருகுவதால் உடல் ஆரோக்கியம், புத்துணர்ச்சி, நோய் வருமுன் காத்தல் போன்ற நன்மைகளை பெற்று வளமுடன் வாழலாம்.
வாழைத்தண்டு சாறு: இந்த சாறை உட்கொள்வதால் சிறுநீரக பிரச்னை வராது. உடல் எடை குறையும். மலச்சிக்கலை போக்கும். உடலில் உள்ள கழிவுகள் அகலும்.
அறுகம்புல் சாறு: ரத்த சோகை நீங்கும். வயிற்றுப் புண்ணை போக்கும். உடல் குளிர்ச்சி பெறும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
வெண்பூசணி சாறு: கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும். உடல் எடையை
குறைக்கும்.
துளசி சாறு: சளி, மூச்சிரைப்பு, சைனஸ் தொல்லைகள் மறையும். வைரஸ் ேநாய்கள் குணமாகும். காய்ச்சல் நோயை குணமாக்கும்.
கொய்யா இலை சாறு: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். புற்று நோய் வராமல் தடுக்கும்.
பிரண்டை சாறு: புற்று நோய் வராமல் பாதுகாக்கும். உடல் எடையை குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். கர்ப்பப்பை நோய்களை
குணமாக்கும்.
பாகற்காய் சாறு: குடலில் உள்ள கெட்ட பூச்சிகள் அழியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சம அளவில் வைக்கும். வாரம் இரு முறை பருகி வந்தால் உடல் நலம் மேம்படும்.
கற்றாழை சாறு: புற்று நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
எலுமிச்சை சாறு: உடல் எடை குறையும். புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்கும். தோல் நோய்கள் குணமாகும். தலை சுற்றல் ஏற்படுவது நிற்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும்.
கறிவேப்பிலை சாறு: முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். உடலின் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.
No comments:
Post a Comment