Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களிடம் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக ‘இளம் விஞ்ஞானிகள் திட்டம்’ (யுவிகா) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில், இரண்டு வார வகுப்பறை பயிற்சி, பரிசோதனை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இருப்பிட அடிப்படையில், ஐந்து குழுக்களாகப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
2024-ம் ஆண்டுக்கான யுவிகா திட்டத்தில் பங்கேற்க விரும்பும் 9-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 20முதல் மார்ச் 20-ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in/registration என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment