பொதுவாக இந்த பிரச்சனை வயது அதிகரிக்கும் போது வரும். இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக உயிரையே இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஏராளமான இயற்கை உணவுகள் உதவி புரிகின்றன. அதில் ஒன்று தான் மிளகு. இந்த மிளகு ஒவ்வொரு சமையலறையிலும் காணப்படும் மற்றும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள். மிளகின் தனித்துவமான காரத்தன்மை உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறது. அதோடு மிளகில் ஏராளமான மருத்துவ பண்புகளும் உள்ளதால், இது ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்லோவாக்கியன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, வெறும் வயிற்றில் மிளகை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதில் முக்கிய பங்கை வகிப்பது தெரிய வந்துள்ளது. இப்போது மிளகு எப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதைக் காண்போம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மிளகு
மிளகு இரத்த அழுத்தத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை அறிவதற்கு முன், இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இரத்த அழுத்தம் என்பது தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தம் பாய்ந்து செல்லும் வேகமாகும். இந்த இரத்த அழுத்தமானது அதிகமாக இருந்தால், அது இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மிளகில் பெப்பரின் என்னும் கலவை உள்ளது. இது தான் அந்த மிளகிற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் காரணமாக உள்ளது. பெப்பரின் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் போன்றவை அடங்கியிருப்பது தெரிய வந்தது. கூடுதலாக, பெப்பரில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி புரிவது தெரிய வந்துள்ளது.
மிளகை எப்போது உட்கொள்ள வேண்டும்?
மிளகின் முழு நன்மைகளைப் பெற விரும்பினால், அதை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அப்படி வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும் மற்றும் அதில் உள்ள பயோஆக்டிவ் கலவைகளும் உடலுக்கு கிடைக்கும். மிளகில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டால், அது இரத்த அழுத்தத்தின் மோசமான விளைவுகளைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மிளகு எப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது?
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மிளகு பல வழிகளில் உதவி புரிகிறது. அதுவும் இதில் உள்ள பெப்பரின் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய செய்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது. இப்படியான பல விஷயங்களால் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் பராமரிக்க மிளகு உதவி புரிகிறது.
கூடுதலாக, பெப்பரினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இரத்த நாளங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்கி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மிளகை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம்?
இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மிளகை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். அதற்கு அவற்றை காலையில் முட்டையின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால் சூப், சாலட் அல்லது பிற உணவுகளின் மேல் தூவி சாப்பிடலாம். இன்னும் சிறப்பான பலனைப் பெற வெதுவெதுப்பான நீரில் சிறிது மிளகுத் தூளை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
என்ன தான் மிளகு ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இரத்த அழுத்த பிரச்சனைக்கு எடுத்து வரும் மருந்து மாத்திரைகளை நிறுத்தாமல், மருத்துவரின் ஆலோசனைக்கு பின் மேற்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment