Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 2, 2024

பின்தங்கிய மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வழிகாட்டுதல்கள்: பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

உயர்கல்வி நிறுவனங்களில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலர்மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐநா சபையில் கடந்த 2015-ம்ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா அடைவதற்குத் தேவையான விதிகளைஉருவாக்கி, தேசிய கல்விக் கொள்கை செயல்பட்டு வருகிறது.அதன்படி, தரமானக் கல்வி,பாலின சமத்துவம், வறுமையின்மை, வேலைவாய்ப்பு மற்றும்பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைவதற்கான சவால்களை எதிர்நோக்கி, பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இந்தப் பரிந்துரைகள் சமூக,பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் திறன்களைமேம்படுத்தி, படிக்கும்போதே சம்பாதித்தல், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கு அளித்தல் உள்ளிட்டவைகளில், அவர்களுக்கான பங்களிப்பை உறுதிசெய்கிறது.

இந்தப் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி நிறுவனங்களில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளைபெறுவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகங்களில் பொருளாதார ரீதியான மாணவர்களின் நலனுக்காக குழுவை அமைக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் உள்ளடக்கிய மாணவர் சேர்க்கை,பாடத் திட்டங்களை உருவாக்குதல், பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான சான்றிதல் படிப்புகளை சேர்த்தல்,பாலின அடையாளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஆலோசகர்களை நியமித்தல், துன்புறுத்தலுக்கு எதிரான அனைத்து விதிகளையும் வளாகத்தில் கடைப்பிடித்தல், படிக்கும்போது சம்பாதித்தல் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

எனவே, அனைத்து உயர் கல்விநிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றுவதில் பங்களிக்கும் வகையிலான இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு யுஜிசி செயலர்மணீஷ் ஆர்.ஜோஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News