Join THAMIZHKADAL WhatsApp Groups
மார்ச் / ஏப்ரல் 2024 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு . அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் 15.12.2023 முதல் 30.12.2023 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணாக்கர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது .
அதன் பின்னர் . பார்வை 2 - ல் காணும் 03.01.2024 நாளிட்ட இவ்வலுவலகக் கடிதத்தில் மேற்குறிப்பிட்ட பணிக்கான கால அளவு 05.01.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது . தற்போது , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 15.02.2024 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment