Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 27, 2024

" சமவேலைக்கு சமஊதியம்" கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் மிக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக - SSTA மாநில அமைப்பு அறிவிப்பு !

SSTA மாவட்ட / வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் வீரமிகு ஆசிரிய பெரும்போராளி இனத்திற்கு வீர வணக்கம்...

இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதிய தொடர் முற்றுகை போராட்டத்தில் 9 நாளாகியும் தமிழக அரசு இதுவரை அழைத்து பேசி ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றாததால், நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இன்று 27.02.2024 நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டமானது நாளை முதல் 28.02.2024 முற்றுகை போராட்டமாக நடைபெற இருக்கிறது. அரசு மிக விரைவாக எங்களது இந்த ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் இன்னும் மிக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

8 நாட்களாக தலைநகரில் கடும் முற்றுகைப் போராட்டம் செய்தும் அரசு கோரிக்கையை நிறைவேற்றாததால் நேற்று நடந்த மாவட்ட & வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட காணொளி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (28.2.2024) புதன் கிழமையன்று தமிழகம் முழுவதும் மாநிலத்தில் நடைபெரும் முற்றுகை போராட்டம் போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அரசு கோரிக்கையை முடிக்கும் வரை அடுத்த அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அரசு அழைத்து பேசி சமவேலைக்கு சம ஊதிய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாளை மறுநாள் முதல் போராட்ட வடிவமும் போர்க்களமும் இன்னும் உச்சபட்சமாக மாறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை மறுநாள்(29.02.24) போராட்டம் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும்.

மேலும் நமது போராட்டத்திற்கு பல்வேறு மூத்த ஆசிரியர் அமைப்புகள் அறிக்கை வாயிலாக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாநில அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகள். தற்போது போர்க்களம் தீவிரமாகி வருவதால் அறிக்கையை வெளியிடுவதை தாண்டி களத்தில் அவர்களும் இறங்குவதற்காக தயாராகி வருகின்றனர்.

அப்படி வரும்போது மாநில தலைமையின் மூலமாக வெளியிடும் அறிக்கையின்படி அனைவரையும் இணைத்து அவர்களையும் நமது போராட்டக் களத்தில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி வாழ்த்தி அந்தந்த மாவட்டங்களில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இதில் நமது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

இது 14 ஆண்டுகால தொடர் போராட்டம் . இது ஒரு தனி இயக்க போராட்டம் என்பதை தாண்டி இடைநிலை ஆசிரியர்களின் இன அழிப்புக்கு எதிரான போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவித்த இயக்கங்கள் மட்டுமல்ல இதுவரை தெரிவிக்காத இயக்கங்களும் ஆதரவினை தெரிவித்து இடைநிலை ஆசிரியர் இனத்தை மீட்டெடுக்க களம் காண மாநில அமைப்பின் சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.

சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து களமாடுவோம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News