Join THAMIZHKADAL WhatsApp Groups
புதினா கீரை |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள்:369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம்:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
One doth the act, another hath the blow
பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...
2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.
பொன்மொழி :
ஒருவனின் தெளிவான
குறிக்கோளே.. வெற்றியின்
முதல் ஆரம்பம்.
பொது அறிவு :
1. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?
2. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
புதினா கீரை :
புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் 'மென்தால்' என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது.புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
மார்ச் 04
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.[1] தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
பொன் முட்டை
ஒரு ஊரில் ஒரு ஏழைத் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் சற்று பேராசை பிடித்தவன். அவன் ஒரு வாத்து வைத்திருந்தான். அவனுடைய அதிருஷ்டம் தினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் ஒரு பொன் முட்டை அளித்துவிடும்.
அந்தத் தொழிலாளி பொறுமையை இழந்தான். இந்த வாத்தின் வயிற்றில் முட்டைகள் நிறைய இருக்கின்றன போல் தெரிகிறது. அதனை ஒவ்வொன்றாக தினமும் நமக்குக் கொடுக்கிறது. ஏன் அப்படிச் செய்கிறது என்று தெரியவில்லை. என்னால் பொறுக்க முடியவில்லை, அதன் வயிற்றிலிருந்து எல்லாப் பொன் முட்டைகளையும் எடுத்து கடைக்குப்போய் விற்று நாம் சீக்கிரமே பணக்காரனாக ஆகி விடலாம். இதை இப்போதே செய்துவிடவேண்டும் என்று நினைத்தான் அந்த முட்டாள் தொழிலாளி.
நல்ல நாள் பார்த்துத்தான் இந்த வாத்தின் வயிற்றை அறுக்க வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு நிறைய பொன் முட்டைகள் கிடைக்கும் என்று நினைத்தான்.ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தான். வாத்தை கட்டிப்போட்டான். அதனை குப்புறப்படுக்கவிட்டு அதன் வயிற்றை அறுத்தான். அந்தோ பரிதாபம் அது வீறிட்டு இறந்தது. அதன் வயிற்றில் ஒரு தங்க முட்டைதான் இருந்தது. கையை விட்டுப்பார்த்தான், எதுவும் கிடைக்கவில்லை.
"ஆஹா! நான் ஏமாந்துவிட்டேனே! தினமும் தவறாமல் எனக்கு ஒவ்வொரு பொன் முட்டையாகத் தந்த இந்த வாத்தை நானே கொன்றுவிட்டேனே! பேராசை பெரு நஷ்டமாகி விட்டதே " என்று தலையிலும் வாயிலும் அடித்துக் கொண்டு புலம்பினான்.
அவன் புலம்பினதால் வாத்து உயிர் பெற்றுவிடுமா? இருப்பதைக் கொண்டு நலமாக வாழ்வது நன்மை பயக்கும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment