Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 31, 2024

ஏப்ரல் 1 முதல் அமல்.. உங்க PAN கார்டுல "இதை" செய்யலனா.. ரூ.1000 அபராதம்.. இந்திய அரசு அதிரடி!

உங்களிடம் பான் கார்டு (PAN Card) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) இருக்கிறதென்றால்..

2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்.. ரூ.1000 அபராததுடன் அமலுக்கு வரும் "கட்டாய மாற்றத்தை" பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசாங்கமானது, ஆதார் நம்பர் உடன் பான் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவில் மிகவும் உறுதியாக உள்ளது. பாண் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதியாக 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் பான்-ஆதாரை இணைக்க தவறினால்.. குறிப்பிட்ட பான் எண் ஆனது ரத்துசெய்யப்படலாம்.

அதுமட்டுமின்றி ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பான்-ஆதாரை தாமதமாக இணைத்தால் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். வருமான வரித்துறையானது (Income Tax Department), பான் கார்டு வைத்து இருக்கும் அனைவருமே (விலக்கு பிரிவின் கீழ் வருபவர்களை தவிர) தங்கள் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிரிவு 139ஏஏ-யின் கீழ் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமமாகும்.

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவும் முயல்கிறது. ஒருவேளை நீங்கள் இன்னமும் உங்களுடைய பான் அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால்.. ரூ.1000 அபராதத்தை தவிர்க்க விரைவாக செய்லபட பரிந்துரைக்கிறோம்.


ஆன்லைன் வழியாக பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?

1. வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) செல்லவும்.

2. அங்கே ஹோம் பேஜின் (Home Page) இடது புறத்தில் உள்ள குவிக் லிங்க்ஸ் (Quick Links) என்கிற என்ற தலைப்பின் கீழ் லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

3. பின்னர் உங்கள் பான் மற்றும் ஆதார் நம்பரை உள்ளிட்டு வேலிடேட் (Validate) பட்டனை கிளிக் செய்யவும்.

4. அபராதம் குறித்து 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்று ஒரு பாப்-அப் மெசேஜ் (Pop-up Message) தோன்றும். அதனை தொடர்ந்து பாண்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கன்ட்டினியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும்.


5. இப்போது தேவையான விவரங்களை உள்ளிட்டு லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

6. பின்னர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி (OTP) நம்பரை உள்ளிடவும்.

7. அவ்வளவு தான் பான்-ஆதார் அட்டையை இணைப்பதற்கான உங்களது கோரிக்கை (Request to link the PAN-Aadhaar card) வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

ஒருவேளை பான்-ஆதார் இணைப்பை நீங்கள் ஆன்லைன் வழியாக செய்ய விரும்பவில்லை என்றால், அருகில் உள்ள பான் கார்டு மையத்திற்கு (PAN Card Centre) சென்று, அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, பான் மற்றும் ஆதார் அட்டைகளின் நகல்களுடன் சேர்த்து பான்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்!

இதேபோல நாடு முழுவதும் உள்ள ஃபாஸ்டாக் (FasTag) பயனர்கள் தங்களுடைய கேஒய்சி (KYC) விவரங்களை மார்ச் 31, 2024 க்குள் புதுப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 1, 2024 முதல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organization - EPFO) ஒரு தானியங்கி பிஎஃப் கணக்கு பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தும், இது வேலை மாற்றங்களுக்கான கைமுறை கோரிக்கைகளை நீக்குகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News