Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2024

சென்னை ஐஐடி-யில் வேலை.. 10 ஆம் வகுப்பு படிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

சென்னை கிண்டியில் ஐஐடி எனப்படும் Indian Institute of Technology என்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐஐடியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த கல்வி நிறுவனத்தில் சேர முடியும். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐஐடி நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்படுகின்றன. அந்த வகையில், ஐஐடியில் டீச்சிங் பணியில்லாத இதர பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம்60 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

குரூப் - ஏ கேட்டகிரி:

தலைமை பாதுகாப்பு அதிகாரி (01 பணியிடம்),

உதவி பதிவாளர் (02), விளையாட்டு அதிகாரி (01),

குரூப் பி:

ஜூனியர் சூப்பிரண்டண்ட் : 9 பணியிடங்கள்

உதவி பாதுகாப்பு அதிகாரி: 04 பணியிடங்கள்

பிடி அலுவலர் - 03 பணியிடங்கள்

குரூப் சி:

ஜூனியர் அசிஸ்டண்ட் -30 பணியிடம்

சமையலர்: 02

டிரைவர் : 02

பாதுகாப்பு அதிகாரி: 10 என

மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வயது வரம்பு: வயதுவரம்பை பொறுத்தவரை தலைமை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். உதவி பதிவாளர் , விளையாட்டு அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 45-வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

ஜூனியர் சூப்பிரண்டண்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி, உடற்கல்வி டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர் ஆகிய பணிக்கு விண்ண்ப்பிப்பவர்கள் 32 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் உதவியாளர், குக், டிரைவர், பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ண்ப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும்.

கல்வி தகுதி: சமையலர் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மண்ட் பிரிவில் பி.எஸ்.சி பட்டம் முடித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். டிரைவர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் அவசியம். 2 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்.

பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் உரிய அனுபவமும் கோரப்பட்டுள்ளது. அனைத்து பணியிடங்களுக்குமான கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?:ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2024 ஆகும்.

தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். விண்ணப்ப அறிவிப்பினை படிக்கhttps://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdfஇங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News