Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களோடு சேர்த்து வரும் திங்கட்கிழமை மார்ச் 11ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறை தவிர்த்து பள்ளிகளுக்கு உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறையை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விடப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் திங்கட்கிழமை மார்ச் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 11ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக செயல்படும்" என்று அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறைவான பணியாளர்களைக் கொண்டு வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment