Join THAMIZHKADAL WhatsApp Groups
12 ஆம் வகுப்பு கணித் தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் கணிதத் தாள் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு கணிதத் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத் தேர்வில் 13 மதிப்பெண்கள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வினாத்தாளில் கேள்வி எண் 17, கேள்வி எண் 25 மற்றும் கேள்வி 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில், அந்த கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment