Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 29, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (29.03.2024) இன்றைய பலன்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


மே
ஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

சிந்தனையில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சிலருக்கு குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் குறைய வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகலாம்.

கடகம்

தற்பெருமையான விஷயங்களை பேசுவதை குறைத்துக் கொள்ளவது நல்லது. வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

மறைமுக தடைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்னைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

கன்னி

புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம்

பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவது நல்லது. கனிவான பேச்சுக்களால் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேண்டும்.

மகரம்

எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

மீனம்

விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News