Join THAMIZHKADAL WhatsApp Groups
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் வாக்காளர்களை விட 6 சதவிகிதம் அதிகமாகும். 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47 கோடி பெண் வாக்காளர்கள் இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
மொத்த வாக்காளர்களில் 19.74 கோடி பேர் இளைஞர்களாக இருக்கின்றனர். இதில் 1.8 கோடி இளைஞர்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். தேர்தலுக்காக 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற இருக்கின்றனர். வாக்குப்பதிவுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல வாக்காளர்களுக்காக ஒவ்வொரு மையத்திலும், குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி, உதவி மையம், போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்வது போன்ற வசதிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, ஜூலை 7ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு 14 நாட்கள் முன்கூட்டியே, ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அதேபோல இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கலந்தாய்வு எனவும் தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.
தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராக வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment