Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 31, 2024

ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் மினிமம் பேலன்ஸ்.. இன்சூரன்ஸ் சந்தா.. பென்சன் பணம்.. வருமான வரி விதிப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது, பென்சன் பணத்துக்கு புது வெரிபிகேஷன், புதிய வருமான வரி விதிப்பு, இன்சூரன்ஸ் சந்தா ஆன்லைனில் மட்டும் போன்ற பல்வேறு புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

இதுகுறித்த விவரம் இதோ.

ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024-25 நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இதனால், பல்வேறு புதிய விதிமுறைகளை (New Rules) பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. சாமானிய மக்கள் தொடங்கி வருமான வரி செலுத்தும் மக்கள் வரையில், இந்த விதிகள் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன.

மினிமம் பேலன்ஸ் விதிகள் (Minimum Balance Rules): இந்த புதிய விதிகளை ஆர்பிஐ (RBI) விதித்துள்ளது. இந்த விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யாமல் வைக்கப்பட்டிருக்கும் பேங்க் அக்கவுண்ட்கள் (Bank Accounts) செயலற்ற கணக்குகளாக (Inoperative Accounts) எடுத்துக் கொள்ளப்படும்.


அந்த அக்கவுண்ட்டில் இருந்து மினிமம் பேலன்ஸ் அபாராதம் (Minimum Balance Charge) எடுத்து கொள்ளப்படாது. ஆனால், கல்வி உதவித் தொகை, அரசு மானிய உதவித் தொகை பெற தொடங்கப்படும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்கள் (Zero Balance Account) இந்த செயலற்ற கணக்குகள் விதிக்கு பொருந்தாது.

அதுமட்டுமல்லாமல், அந்த செயலற்ற கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வங்கிகள் மூலம் எந்தவொரு கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த விதிகளை பின்பற்ற அனைத்து வங்கிகளுக்கும் சில மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன. ஆகவே, செயலற்ற கணக்குகளை எளிதாக ஆக்டிவேட் செய்யலாம்.

வருமான வரி விதிகள் (Income Tax Rules): 2024-25 நிதியாண்டில் ரூ.3 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்டிருந்தால், எந்தவொரு வரியும் செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் வருமானம் கொண்டிருந்தால், 5 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

அதேபோல ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கும் மேல் வருமானம் கொண்டிருந்தால், 30 சதவீதம் வரிமான வரி செலுத்த வேண்டும்.

என்பிஎஸ் லாகின் விதிகள் (NPS Login Rules): தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System - NPS) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, (PFRDA) புதிய பாதுகாப்பு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விதிமுறை காரணமாக பென்சன் அக்கவுண்ட்டை லாகின் செய்யும்போது, வழக்கமான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மட்டுமல்லாமல், ஆதார் அடைப்படியிலான 2 கட்ட வெரிபிகேஷன் (Aadhaar-based Two Step Verification) சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆதார் கார்டு உடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் பாலிசி விதிகள் (Insurance Policy Rules): இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI) இந்த விதிகளை வகுத்துள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் ஆயுள் காப்பீடு, உடல்நல காப்பீடு மற்றும் பொது காப்பீடு உட்பட அனைத்து பாலிசிகளும் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News