Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 20, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2024

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உலக சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம்:

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

பழமொழி :

Put your own shoulder to the wheel.

தன கையே தனக்கு உதவி.

இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பல மனங்களின் கூட்டிணைப்பால் உருவானது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

பொது அறிவு : 

1. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?


விடை: சத்யமேவ ஜெயதே 

2. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: தெலுங்கானா

English words & meanings :

Vague - unclear;தெளிவற்ற. 

vicious - deliberately 

violent;தீய.

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை : காசினி கீரையானது ஜீரண கோளாறு,பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணபடுத்தும் தன்மை கொண்டது. உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. காசினி; கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும்.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

நீதிக்கதை

 ஒரு கிராமத்தில் சேவல் ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அது காலையில் தன் குரலில் கூவி எல்லாரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது.  அப்போது ஒரு நரி மரத்தின் அருகில் வந்து அந்த சேவல் இடம், “ஹலோ, நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது. 

சேவல் குனிந்து கீழே பார்த்தபோது அந்த நரி மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சேவல் நினைத்தது, “நான் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் இவன் தந்திரமான நரி என்னுடைய நண்பர்கள் பலரையும் கொன்று சாப்பிட்டுள்ளான். எனவே நான் தான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணியது. 

சேவல் அந்த நரியை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் அந்த நரி சேவலிடம் மீண்டும் பேச முயற்சித்தது. நரி சேவலிடம் சொன்னது, “நான் உனக்கு நல்ல விஷயம் ஒன்றை சொல்ல தான் வந்துள்ளேன். நம் காட்டில் ராஜாவாகிய சிங்கம் ஒரு புது கட்டளை பிறப்பித்துள்ளது”. 

நரி சொன்னதை அந்த சேவல் நம்பவில்லை ஆனாலும் அது என்னவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அப்போது சேவல் நரியிடம், “சரி மகராஜா என்ன கட்டளை தான் பிறப்பித்துள்ளார்? ” என்று கேட்டது. அதற்கு நரி சொன்னது, “இந்த காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக நண்பர்களாக பழக வேண்டும். எந்த ஒரு சண்டையும் வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்”. இதுதான் சிங்கராஜாவின் கட்டளை என்றது அந்த நரி. 

அதற்கு சேவல், “அப்படியா இது உண்மையா” என்று கேட்டது. நரியும், “ஆமாம் உண்மைதான்” என்றது. அதுமட்டுமல்ல  சிங்கராஜா இன்று நமக்காக அவருடைய குகை அருகில் உணவு ஏற்பாடு செய்துள்ளார். எனவே நாம் சேர்ந்து சென்று நம் உணவை அருந்திவிட்டு வரலாம்,என்றது நரி. 

அப்போது அங்கே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது .அந்த சத்தம் கேட்டதும் நரியின்  முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அதைப்பார்த்த சேவலுக்கு நரிக்கு நாய்கள் என்றால் பயம் என்று புரிந்தது. நாய்கள் எப்போதும் நரியை பார்த்தால் விரட்டி கொண்டே இருக்கும். அதனால் நரிக்கு நாய் என்றால் பயம். 

நரி சேவலிடம் சொன்னது, “நண்பா நீ மரத்தின் கிளையில் தானே இருக்கிறாய் அருகில் ஏதாவது நாய் தென்படுகிறதா?” என்று கேட்டது. சேவல் சுத்திமுத்தி பார்த்தது அங்கே எந்த நாயும் இல்லை. ஆனால் நரிக்கு ஒரு பயம் காட்ட வேண்டும் என்று எண்ணிய சேவல், “ஒரு கூட்டமாக நாய்கள் இங்கேதான் ஓடி வந்து கொண்டிருக்கின்றன” என்றது. 

அதைக்கேட்ட நரியோ அப்படியா, “அப்போது நான் இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை” என்று பயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. நரி மிகவும் வேகமாக பயந்து ரொம்ப தூரம் ஓடி விட்டது. அப்போது சேவல் நரி ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது. 

நீதி : அடுத்தவருக்கு தீமை நினைத்தால் அது நமக்கே தீமையாக வந்து முடியும்.

இன்றைய செய்திகள்

20.03.2024


*தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

*85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க 20ஆம் தேதி வீடு வீடாக படிவம் வழங்கப்படும்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

*தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா ஏற்பு; ஜார்கண்ட் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு.

*திருவனந்தபுரம் மெயில் ரயில் நேரம் ஜூலை 15ஆம் தேதி முதல் மாற்றம்.

*ஐபிஎல் கிரிக்கெட்டை நேரடியாக காண மதுரையில் மெகா திரை அமைப்பு ஒளிபரப்பு; அனைவருக்கும் அனுமதி இலவசம்.

Today's Headlines

*Chances of rain  in Tamil Nadu till 23rd.

 *Forms will be distributed door to door on 20th for people above 85 years of age to vote –  Tamil Nadu Chief Electoral Officer.

 *Tamilisai Soundarrajan resignation is Accepted;  Additional charge given to the Governor of Jharkhand.

 *Thiruvananthapuram Mail Train running Time Changed from 15th July.

 *Mega screen system broadcasting in Madurai to watch live IPL cricket;  Admission is free for all.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News