நாடே தவமிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் சற்று முன் தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அன்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் விஜய தாரணி அவர்கள் ராஜினாமா செய்ததால் காலியாகி உள்ள சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள்
முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏப். 19ல் தேர்தல் நடக்கும்.
இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 20.03.24
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24
வேட்பு மனு பரிசீலனை- 28.03.24
வேட்பு மனு வாபஸ்- 30.03.24
தேர்தல் தேதி- 19.04.24
ஓட்டு எண்ணிக்கை 04.06.24
பிற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் பின்வருமாறு
முதல்கட்ட வாக்குப்பதிவு
முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இரண்டாம் கட்டம்
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
மூன்றாம் கட்டம்
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
நான்காம் கட்டம்
நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.
ஐந்தாம் கட்டம்
ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.
ஆறாம் கட்டம்
ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஏழாம் கட்டம்
ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment