Join THAMIZHKADAL WhatsApp Groups
உலக தண்ணீர் தினம்
திருக்குறள்:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனத்தால் அனைத்தையும் மாற்ற முடியும். --கெளதம புத்தர்
பொது அறிவு :
1. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகளை குறிக்கிறது?
33 ஆண்டுகள்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
காசினி கீரை :கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றி உடல் பருமனை குறைக்கிறது. கால்சியம் நிறைந்து காணப்படுவதனால் பற்களின் உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கிறது
மார்ச் 22
உலக நீர் நாள் (World Water Day),
உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை
நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!!
அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன். அன்று வீட்டின் முற்றத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான். வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான். அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம். வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக ! நேரம் கடந்ததது. ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது. வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்தது. அவன் திகைத்து நின்றான். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு அதற்கு எமனாகி விட்டது . நமக்கு வரும் கஷ்டங்கள் நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம். எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே, அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment