Join THAMIZHKADAL WhatsApp Groups
மார்ச் 21- குருப்-2 தேர்வு நேர்காணல் பதவிகளில் உள்ள 29 காலியிடங்களை நிரப்ப இறுதிக் கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப் படும் என்றும் அதைத் தொடர்ந்து, நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வுப் பட்டியல் ஏப்ரல் 2ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசிக் கட்டமாக நேர் முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு தகுதியுள்ள தேர்வர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட தேர்வர் கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க 3 நாட்கள் அவகாசம் அளிக்கப் படும்.
இதுகுறித்து அந்த தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப் பப்படும். அவர்கள் ஒருமுறை பதிவு (OTR) வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
நேர்காணல் பதவி களுக்கான இந்த இறுதி நேர்முகத்தேர்வு நடத்தப் பட்ட பிறகு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் ஏப்ரல் மாதம் 2ஆ-வது வாரத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment