Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 18, 2024

நீட், ஜே.இ.இ தேர்வு தேதிகளில் மாற்றமா? என்.டி.ஏ விளக்கம்

மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும் நிலையில், JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு மற்றும் நீட் (NEET UG 2024) தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

No change in exam schedule of JEE Main, NEET UG; CUET yet to be decided

முன்னதாக வெளியிடப்பட்ட காலண்டரின்படி, கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை 2024 அமர்வு 2 ஏப்ரல் 4 முதல் 15 வரை நடத்தப்படும். அதேநேரம் JEE முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டது, ஆனால் அறியப்படாத காரணங்களால் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது, அதற்கான விண்ணப்ப திருத்தம் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும்.

"JEE முதன்மை அமர்வு 2 மற்றும் NEET தேர்வுகள் அட்டவணைப்படி இருக்கும் என்று indianexpress.com க்கு தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், CUET தேர்வு அட்டவணை விண்ணப்பப் பதிவு முடிந்ததும் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் அட்டவணையின்படி தேர்வை நடத்த முயற்சிப்போம்,' என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி கூறினார்.

அசல் அட்டவணையின்படி, இந்த ஆண்டு, CUET UG 2024 தேர்வு மே 15 முதல் 31, 2024 வரை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றும் கடைசி தேர்வு முடிந்த மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு நகர அறிவிப்பு ஏப்ரல் 30 முதல் வெளியிடப்படும், மேலும் அட்மிட் கார்டுகள் மே 2024 இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.

யு.ஜி.சி தலைவர் எம் ஜகதேஷ் குமார் இது குறித்த தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், CA மே மாத தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) விரைவில் வெளியிடவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ காலண்டரின்படி, சி.ஏ அடிப்படை பாடத் தேர்வு ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 

இடைநிலை குரூப் 1 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படும். சி.ஏ ஆகுவதற்கான கடைசி படியான சி.ஏ இறுதித் தேர்வு, மே 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் குரூப் 1, மற்றும் குரூப் 2 தேர்வு மே 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். திருத்தப்பட்ட அட்டவணை மார்ச் 19 மாலை வெளியிடப்படும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News