ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மிகவும் முக்கியம்.
அதேபோல் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அறிவியல் மனப்பான்மை முக்கியம். அறிவியல் மனப்பான்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) கூறு 'ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது அடிப்படை கடமை'
என வலியுறுத்துகிறது. அறிவியல் மனப்பான்மையோடு தான் வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது காலத்தின் தேவை.
அறிவியல் மனப்பான்மை என்றால்?
நடைமுறை உலகில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் தகவல்கள் கருத்துக்களை அப்படியே நம்பாமல் அதன் உண்மை தன்மையை ஆராயும் உணர்வு தான் அறிவியல் மனப்பான்மை. வள்ளுவர் சொன்ன 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'என்பதும் அறிவியல் மனப்பான்மை தான்.
மனிதர்கள் இயற்கையிலேயே கேள்வி கேட்கும் இயல்புடையவர்கள் குழந்தையாக இருக்கும்போதே பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்கிறோம். அதற்கான பதில்களை தத்தமது அனுபவத்திலிருந்து அல்லது பெற்றோர், சுற்றத்தார் சொல்ல கேட்கிறோம். இவர்களுக்கு இந்த பதில்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும்? பெரும்பாலான பதில்கள் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு,மதம், ஜாதியை சேர்ந்திருக்கிறது. பதில்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அறிவியல் மனப்பான்மை என்பது இவை சரிதானா என்று ஆராய்ந்து பார்ப்பது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇👇
No comments:
Post a Comment