Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2024

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 01/2024 , நாள்o9.02.2024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் , விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர் . அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024 - லிருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் ( Edit Option ) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

TRB Press News 13.03.2024 - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News