Join THAMIZHKADAL WhatsApp Groups
ஊதியம் பெற்று வேலை செய்பவர்கள், தொழில் செய்பவர்கள், முதலீட்டாளர்கள் என்று அனைவருமே தங்களது ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப அரசுக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்பது அரசு விதி.
இதன் விகிதமும் கட்டும் முறையும் மக்கள் இருக்கும் துறையை பொருத்து மாறுபடும்.
ஊதியம் பெரும் ஊழியர்கள் இப்போது வரை தங்களது ஆண்டு வருமானத்தை ஆண்டின் கடைசியில் கணக்கிட்டு அதில் பிடித்தம் இருந்தால் அது போக உள்ள தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். வருமான வரி எவ்வளவு என்பதை அவசர கணக்கிட்டு டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் தான் பெரும்பாலும் சம்பளத்தில் பிடிக்க சொல்வர். இன்னும் ஒரு சிலர் பிப்ரவரி ஒரே மாதத்தில் மொத்த வரியையும் அரசுக்கு செலுத்துவர்.
ஒரு சில ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் அப்படியே வரியாக கட்டும் நிலை கூட ஏற்படும். அந்த பணம் போதாமையால் சேமிப்பில் இருந்து ஆன்லைன் அல்லது வங்கி சலான் மூலம் வரி செலுத்தும் நிர்பந்தம் கூட ஏற்படலாம். பின்னர் அந்த மாத வீட்டு பட்ஜெட்டை என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசையும் நிலை ஏற்படும். இதை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதை பின்பற்றாத பல ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுவது வழக்கம்.
ஒரு சிலர் கடைசி நேரத்தில் கட்டுவதால் பிடித்தங்களைக் கழிக்காமல் கூடுதல் வரியையும் செலுத்திவிட்டு பின்னர் அதை வருமான வரி ரிட்டனில் எடுக்க போராடிக்கொண்டு இருப்பர். இதை நெறிப்படுத்த தமிழக அரசு இந்த மார்ச் மாதம் முதல் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்த மார்ச் முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழக அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஆண்டு முதல் மொத்த ஊதியத்தை வைத்து ஊழியர்களுக்கான வருமான வரி எவ்வளவு என்பதை தோராயமாக மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திர தவணையை மதிப்பிட்டு மாதாந்திரம் தானாக பிடித்தம் செய்து விடும். மேலும் ஊதிய உயர்வு மற்றும் அகவிலை உயர்வு போன்ற உயர்வின் போது அதற்கு ஏற்ப வரியில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment