Join THAMIZHKADAL WhatsApp Groups
புதிய ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) கேட்டு விண்ணப்பித்து வருவோருக்கு அடுத்த தற்போதைக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படாது என்று குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கு என்ன காரணம் என்பதையும், தேர்தல் காலங்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படாதது ஏன் என்பது பற்றியும் பார்ப்போம்.
ரேஷன் கார்டு என்று அழைக்கப்படும் குடும்ப அட்டை தமிழகத்தில் மிக முக்கியமானது.. ரேஷனில் வெறும் பொருட்கள் வாங்குவதற்கும், அடையாள ஆவணமாக மட்டும் ரேஷன் கார்டு இருப்பது இல்லை.. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசுகள் பல்வேறு சலுகைகள் அறிவிக்கின்றன. பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன..
ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தான் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் .. கலைஞர் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் மாதம் மாதம் கிடைக்கும். அதேபோல் வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகை என அரசு அறிவிக்கும் நிதியுதவி திட்டங்கள் எல்லாமே ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தான் தரப்படுகிறது.
இதனால் ரேஷன் கார்டு வாங்க, புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் ஏற்கனவே கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. தற்போதைய நிலையில் இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் சிறப்பான மாநிலங்களில் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன.இவற்றிற்கு உணவு பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தமிழக அரசு கடந்த முறை பொங்கல் பரிசு அறிவித்த போது வெளியிட்ட தகவலின் படி, 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேருக்கு உணவு பொருட்கள் பெற்று பயன்பெறுகிறார்கள். இவர்களில் அரசின் உத்தரவுப்படி 6 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 842 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளார்கள்.
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவு பொருட்களை மாநிலத்தின் எந்த ஊரில் உள்ளவர்களும் எந்த ஊரிலும் போய் வாங்கி கொள்ள முடியும். உணவுப்பொருள் வழங்கும் திட்டம் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதுடன், ரேஷன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
இதனால் புதிதாக திருமணம் ஆனவர்கள் உடனடியாக செய்யும் விஷயம் ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பது தான்? புதிதாக திருமணம் ஆனவர்கள், கூட்டுக்குடும்பத்தில்வசிப்பவர்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள உங்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து ஆன்லைன் மூலம் பெயரை நீக்குகிறார்கள்.. பின்னர் அந்த சான்றிதழுடன், குடும்ப தலைவரின் புகைப்படம் , வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை இணைத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.. ஒவ்வொரு மாதமும் இப்படி 40000 பேர் வரை விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது..
இந்நிலையில அண்மையில் சுமார் 45000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கியது தமிழக அரசு.. இதனால் பலரும் ஆர்வமுடன் தற்போது விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வரும் ஜூன் மாதம் வரை புதிதாக யாருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படாது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி தான் நடக்கிறது. எனவே அதுவரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால் , புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. அதேபோல் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அதுவரை எந்த பதிலும் வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்,
No comments:
Post a Comment