Join THAMIZHKADAL WhatsApp Groups
உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,அடிக்கடி மயக்கம் ஆகியவை ஏற்படும்.
உடலில் இரும்புசத்து குறைபாடு இருந்தாலும் உடல் களைப்பு ஏற்படும்.எனவே உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில பொருட்களை பாலில் சேர்த்து குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கரிசலாங்கண்ணி
2)சீரகம்
3)பால்
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பொடியாக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் 4 தேக்கரண்டி சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பொடியாக்கி கொள்ளவும்.அரைத்த கரிசலாங்கண்ணி பொடியில் சீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு ஒரு கொதிவிட்டு கிளாஸிற்கு ஊற்றி அருந்தவும்.டீ,காபிக்கு பதில் இந்த பாலை குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)பேரிச்சம் பழம்
2)பால்
செய்முறை:-
ஒரு கிளாஸ் அளவு பாலை பாத்திரத்தில் ஊற்றி ஒரு பேரிச்சம் பழத்தை போட்டு கொதிவிட்டு குடித்து வந்தால் இரத்தம் ஊரும்.இரத்த சோகை பாதிப்பு முழுமையாக குணமாகும்.
No comments:
Post a Comment