Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 10 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment