Join THAMIZHKADAL WhatsApp Groups
எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2024 இடைநிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இதுநாள் வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் / எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் , மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக் கேற்றவாறு முடிவு செய்து , தேர்வு நேரத்தில் சலுகைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்காண் இனங்களில் மருத்துவ சான்றிதழ்களில் ஏதேனும் ஐயம் ஏற்படின் , அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தேர்வெழுதிய பின்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்துமாறும் , அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவித்து , சலுகைகள் வழங்கப்பட்ட தேர்வர்களின் விவரங்களை பின்னேற்பாணை பெறும் பொருட்டு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் வழியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Ratification SSLC 2024 - Download here
No comments:
Post a Comment