Join THAMIZHKADAL WhatsApp Groups
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது.
கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் இருந்து மீள ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வரலாம்.உடலில் அதிகளவு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெயில் தான்.நீர்ச்சத்து இழப்பு ஏற்ப்பட்டால் தொண்டை கரகரப்பு,உடல் வறட்சி,கண் வறட்சி ஏற்படும்.
அதுமட்டும் இன்றி மலச்சிக்கல்,சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.
எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி சத்து இருக்கிறது.இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கோடை காலத்தில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது நல்லது.
No comments:
Post a Comment