Join THAMIZHKADAL WhatsApp Groups
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னால் படைவீரர்களின் நவனிற்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் சலுகை, தற்போது கைப்பெண்கள், போரில் ஊணமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
வரும் நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி வீட்டுவளித் தொகையினை மீளப்பெறும் இத்திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் தீட்டிப்பு செய்து வழங்கி ஆவன செய்யப்படும். இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர். இயக்குநர், முன்னாள் படைவீரர் நல இயக்ககம், சென்னை, அவர்கள் இவ்வறிவிப்பு தொடர்பாக, மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுவரியினை மீளப்பெறும் திட்டமானது 01.04.1988 முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடக்கத்தில் இத்திட்டம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதாகவும்,
பின்னர் படிப்படியாக நீட்டிப்பு செய்யப்பட்டு, தற்போதைய நிலையில் போர் கைம்பெண்கள், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள், வருடாந்திர பராமரிப்பு மானியம் பெறும் போரில் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் வீரதீரச்செயலுக்கான வீர விருதுகள் பெற்ற முன்னாள் படைவீர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அவ்வகையில் ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.10,000/- (இரண்டு அரையாண்டு) அல்லது செலுத்தப்பட்ட அல் வரித்தொகை இதில் எது குறைவே (Whichever is less) அத்தொகை மீள வழங்கப்படுவதாகவும், கடந்த 2022-2023 -ஆம் நிதியாண்டில் மொத்தம் 103 நபர்களுக்கு ரூ.249.590/- (ரூபாய் இரண்டு வட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து ஐநூற்று தொண்ணூறு மட்டும்) தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1,25,507 முன்னாள் படைவீரர்கள் அவர்களது பெயரினை பதிவு செய்துள்ளதாகவும், நமது தாய்நாட்டிற்காக நாட்டின் எல்லைகளில் தன்னலமற்ற சேவைகள் செய்து ஓய்வு பெற்ற நமது முன்னாள் படைவீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, வீட்டுவரித் தொகையினை Ben பெறும் திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்வதன் மூலம். முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேறும் எனவும். மாவட்டங்களில் வசிக்கும் முன்னாள் படைவீர்கள் செலுத்திய வீட்டுவரி விபரங்கள் கணக்கிடப்பட்டதில் 31.08.2023 -ம் தேதி நிலவரப்படி சுமார் 16,806 முன்னாள் படைவீரர்கள்.
ஓர் அரையாண்டிற்கு (Hall your) தோராயமாக ரூ.2,29,34,108/- வீட்டு வரியாக செலுத்தியுள்ளனர் எனவும். அதன்படி ஆண்டொன்றுக்கு தோரயமாக ரூபாய் ஐந்து கோடி செலவினம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும். இத்தொகையினை முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து ஈடு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும். அவர் முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுவரி மீளப்பெறும் திட்டத்தினை நீட்டிப்பு செய்து வழங்கிடும் நேர்வினில் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு இத்திட்டத்தினை விரிவுபடுத்த பரிந்துரைத்துள்ளார்.
முன்னான் படைவீரர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து. அதனை ஏற்று நடப்பு நிதி ஆண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கிட பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment