Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜூனியர் உயர்நிலைப் பள்ளியின் உதவி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெட் தேர்வு:
மத்திய அரசு முன்னதாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை கட்டாயம் ஆக்கியது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெறுவதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் உத்திரபிரதேச அரசு ஆசிரியர் பணிக்கு TET தேர்வை தவிர்த்து கூடுதலாக சூப்பர் டெட் என்ற மற்றொரு தகுதி தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் அலகாபாத் உய்நீதிமன்றம் ஆனது ஆகஸ்ட் 23, 2010 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜூனியர் உயர்நிலை பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் பதவி உயர்வு பெறுவதற்கு இவர்களுக்கு டெட் தேர்வு தேர்ச்சி அவசியமாகும். இதற்காக பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
No comments:
Post a Comment