சிபிஎஸ்இ கல்வி இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறியதாவது: 2024-25ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் சார்ந்த கேள்விகள் இடம் பெறும்.
பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டாலும், குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40ல் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கப்பூர்வமான, விமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் கற்றலை நோக்கி, மனப்பாடம் செய்வதிலிருந்து விலகிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே வாரியத்தின் முக்கிய நடவடிக்கை ஆகும். இதற்காக 2024-2025 கல்வி அமர்வுக்கான மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை புதிய கல்வி கொள்கையுடன் சீரமைப்பதை வாரியம் தொடர்கிறது. எனவே இந்த கல்வி ஆண்டு முதல் வினாத்தாள்களில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படையிலான கேள்விகளின் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment