Join THAMIZHKADAL WhatsApp Groups
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் சாதகமான பலனே கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பிள்ளைகளால் நல்லது நடக்கும். நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்றைய தினம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள். முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
எந்த ஒரு முடிவையும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. இன்றைய தினம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பிள்ளைகளிடம் கடிந்து பேச வேண்டாம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
உங்கள் சேமிப்பு இன்று தக்க சமயத்தில் உதவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இன்றைய தினம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
கடகம்
கடகம் ராசி அன்பர்களே, ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற மன உளைச்சல் ஏற்படலாம்.
பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். இன்றைய தினம் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி உங்களுக்கு சாதகமாக அமையும் உத்தியோகஸ்தர்களுக்கு.
மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள் கடன் பிரச்சனை குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைய தினம் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். தன வரவு ஏற்படும். பணியிட மாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படலாம். உங்கள் தேவைகள் இன்று பூர்த்தியாகும். இன்றைய தினம் பயணத்தால் அனுகூலம் உண்டு.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று லாபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இல்லத்தில் மகிழ்ச்சியற்ற சூழல் உருவாகக்கூடும். தேவைகள் நிறைவேறும்.
நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். இன்றைய தினம் சிக்கனமாக செயல்படுவதால் கடன்கள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உறவினர்களின் வருகை இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது தன்மையாக பேசுவது நல்லது. இன்றைய தினம் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். இன்றைய தினம் தொழில் வியாபாரத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் தன்மையாக பேசுவது நல்லது.
பிள்ளைகளால் தேவையற்ற செலவு ஏற்படும். இன்றைய தினம் சுறுசுறுப்பின்றி சோர்வுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே, இன்று உறவினர்களால் நல்லது நடக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. திடீர் தன வரவுகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சகோதர சகோதரிகள் உங்கள் தேவையை அறிந்து தக்க சமயத்தில் உதவுவார்கள். இன்றைய தினம் சுப செலவுகள் ஏற்படும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று கூற முடியாது. சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் இருந்து வந்த மோதல் போக்கு முடிவுக்கு வரும்.
அதே நேரம் பயணத்தின் போது வாகனங்களால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய தினம் லாபம் கிடைக்கும் நாளாகவே இருக்கும்.
No comments:
Post a Comment