Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 7, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (07.04.2024) இன்றைய பலன்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மேஷம்: 

இன்று கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும்.
வீண் அலைச்சல் எதிர் பாராத செலவு இருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய குறிக்கோளுடன் திட்டமிட்டு கல்வியை கற்பது நன்மை தரும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3

ரிஷபம்:

இன்று தொழில் முன்னேற்றமடையும். காலத்தை வீணாக்காமல் எதையும் உரிய நேரத்தில் செய்வீர்கள். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மிதுனம்:

இன்று பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். வாகன யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

கடகம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

சிம்மம்:

இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி:

இன்று அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். மாணவர்கள் பாடங்களை ஆர்வமுடன் படிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

துலாம்:

இன்று பணவரத்து கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மனஅமைதி கிடைக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

விருச்சிகம்:

இன்று வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

தனுசு:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:

இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:

இன்று வீண் அலைச்சல் காரிய தடை, உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். நூதனமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மீனம்:

இன்று பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News