Join THAMIZHKADAL WhatsApp Groups
மேஷம்:
இன்று எவரையும் கண்டு அஞ்சாமல் மனம் போன போக்கில் காரியங்களை செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன திருப்தியடைவீர்கள்.
எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள், 1, 9
ரிஷபம்:
இன்று உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும்.
பணவரத்து அதிகப்படும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
மிதுனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும்.
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட் எண்கள்: 2, 3
சிம்மம்:
இன்று மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி:
இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள்.
பணவரத்து அதிகரிக்கும். நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
துலாம்:
இன்று சாதகமான பலன்கள் உண்டாகும்.
மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளமஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.
மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
தனுசு:
இன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம்பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மகரம்:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல், தடைதாமதம் சந்திக்க வேண்டி இருக்கும். எதிலும் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள், 3, 7
கும்பம்:
இன்று ஊக்கமுடன் உழைக்க தயங்க மாட்டீர்கள்.
எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணம் வரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
மீனம்:
இன்று தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது.
பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
No comments:
Post a Comment