Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 25, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (25.04.2024) இன்றைய பலன்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


மேஷம்


சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். காதணி சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நெழிவு, சுழிவுகளை அறிந்து கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.


ரிஷபம்


நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.


மிதுனம்


புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.


கடகம்


திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும்.


சிம்மம்


புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். கவலை விலகும் நாள்.



கன்னி


வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.


துலாம்


விமர்சனங்களால் மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும்.


விருச்சிகம்


உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசுப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும்.


தனுசு


சிந்தனைகளில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.


மகரம்


வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்


உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் மதிப்பு மேம்படும். மூத்த சகோதரர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். கமிஷன் சார்ந்த செயல்பாடுகளால் தனவரவுகள் மேம்படும். வாகனம் சார்ந்த விஷயத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும்.



மீனம்


மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் தோன்றி மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News